வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்க பொது கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்க பொது கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ்.வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்கத்தின் பொது கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் இன்றைய தினம்(05)
காலை 10.30 மணிக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலரின் முன்னிலையில் இடம்பெற்றது
பிரதேச செயலர் உரையாற்றுகையில் வெளி பிரதேசங்களை விடவும் எமது பிரதேசத்தில் பொருட்களின் விலைகளை வர்த்தகர்கள் அதிகப்படுத்தியிருப்பதாகவும் எரிபொருள் நிரப்பு நிலையம் போன்றவை எமது பிரதேசத்திற்கு அவசியமாக தேவைப்படுகின்றது என்றும், நட்சத்திர தரத்திலான உணவகம் அமைந்தால் நல்லது என்றும் தொடர்ந்து பேசுகையில் பிரதேச வர்த்தகர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் இனிவரும் புதிய நிர்வாகத்தினர் தொடர்ந்து இவ்வாறன விடயங்களில் கவனம் செலுத்துமாறும் தெரிவித்தார்
முன்னாள் தலைவர் அவர்கள் தனது கருத்துரையில் எதிர்காலத்தில் வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்கத்தினரின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு ஏற்றதானதொரு கட்டடத்தையோ அல்லது அதற்குரிய இடத்தினையோ ஒழுங்கு செய்து தருமாறு பிரதேச செயலரிடம் கோரிக்கை வைத்திருந்தார்
தொடர்ந்து நடைபெற்ற புதிய நிர்வாக தெரிவின் போது தலைவர் வினோத், செயலாளர் ஞானராஜ், பொருளாளர் துஸ்யந்தன் என்பவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
மூன்று வருடங்களின் பின்பு நடைபெற்ற பொது கூட்டத்தில் புதிய நிர்வாகத்தினராக தலைவர் வினோத், செயலாளர் ஞானராஜ், பொருளாளர் துஸ்யந்தன் என்பவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து சமீப காலத்தில் பிரதேச வர்த்தகர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இவை தொடர்பாக பிரதேச சபையுடன் பேசுவதாகவும் தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக பிரதேச செயலர் உறுதியளித்திருந்தார்.

