வெற்றிலைக்கேணி சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை...
"வெற்றிலைக்கேணியில் கரைவலை வாடியால் மீனவர்களிடையே தொடரும் முறுகள் நிலை” எனும் தலைப்பில் 18.03.2025 திகதி பத்திரிகைகளில்; வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தின் பிரவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையில் அடிப்படையில் கவனம் செலுத்தியுள்ளது.
அதன்பிரகாரம் இந்த பிரச்சினையினை தீர்ப்பதற்கு உரிய தலையீட்டினை மேற்கொண்டு 21.03.2025 இற்குமுன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவி பணிப்பாளருக்கும் மருதங்கேணி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் அறிவுறுத்தல் வழங்கி எம்மால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
த.கனகராஜ்
பிராந்திய இணைப்பாளர்
HRCSL
யாழ்ப்பாணம்
இவ்வாறு யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.