Breaking News

மருதங்கேணி வைத்தியசாலை எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக வைத்தியசாலை வைத்தியர் ஆதங்கம்

 மருதங்கேணி வைத்தியசாலை எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக 

வைத்தியசாலை வைத்தியர் ஆதங்கம் 





யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வைத்தியசாலையில் பல அடிப்படை பிரச்சனைகள் காணப்படுவதாக மருதங்கேணி வைத்தியசாலை வைத்தியர் இன்று நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார் 


அதாவது முக்கியமாக வைத்தியசாலையில் நான்கு வைத்தியர்கள் கடமையாற்ற வேண்டும் என்றும் இப்போது இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே பணியாற்றி கின்றனர் என்றும் 


இதனால் தாம் பல பிரச்சனைகளை எதிர் நோக்குவதாகவும் வைத்தியர் தனது கவலையை தெரிவித்துள்ளார் அதுமட்டுமின்றி ஊடகங்கள் வாயிலாக வைத்தியசாலை தொடர்பாக பல போலியான செய்திகள் வருவதால் தமக்கு இங்கே வேலை செய்ய கஸ்டமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் 


மக்களின் கவணத்திற்கு வைத்தியசாலை தொடர்பாக எந்த பிரச்சினைகள் வந்தாலும் தம்மை நேரடியாக தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றார் 


இவை சம்பந்தமாக பிரசேத அபிவிருத்திக்குழு தலைவர் குறிப்பிடுகையில் தம்மால் இயன்ற அளவு வெகு விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்படும் என கூறியுள்ளார்