பருத்தித்துறை நகரசபையின் கீழ்த்தரமான செயற்பாடுகள் கொந்தளித்த வடமராட்சி கிழக்கு மக்கள் இளங்குமரனின் விசேட அனுமதி
பருத்தித்துறை நகரசபையின் கீழ்த்தரமான செயற்பாடுகள்
கொந்தளித்த வடமராட்சி கிழக்கு மக்கள்
இளங்குமரனின் விசேட அனுமதி
இன்று(27)காலை நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் குடத்தனை கிராமத்தினை சேர்ந்த மக்கள் அபிவிருத்திக்குழு தலைவரிடம் சில கேள்விகளை முன் வைத்தனர் அதில் பிரதானமாக
குடத்தனை கிராமத்தில் பருத்தித்துறை நகரசபையினர் தொடந்து தமது கிராமத்தில் குப்பைகளை கொட்டுவதாகவும் அதற்கு நாம் பல தடவைகள் எதிர்ப்பு தெரிவித்தும் அரச உத்தியோகத்தர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்
இதற்கு அபிவிருத்திக்குழு தலைவர் இளங்குமரன் இப்பிரச்சினைக்கு நாம் தீர்வு தருவதாக கூறிய போது கிராம மக்கள் நம்பிக்கை இல்லை என பகிரங்கமாக தெரிவித்தனர்
இதனைத்தொடர்ந்து அப்பிரதேச மக்களுக்கு இளங்குமரன் விசேட அனுமதி ஒன்றினையும் வழங்கினார்
அதாவது நகரசபையினர் இனிமேல் குப்பைகள் கொட்டினால் அவர்களை கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைக்கவும் என்றும் அவர்களுக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க படும் என்றும் கூறினார்