Breaking News

கிளிநொச்சி நபரிடம் 60 இலட்சம் மோசடி சந்தேக நபரை கைது சொய்த கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவு.

 

கிளிநொச்சி நபரிடம் 60 இலட்சம் மோசடி சந்தேக நபரை கைது சொய்த கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவு.



பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்புவதாக கூறி LMM VISA CONSULTANCY எனும் டிக்கெட் விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொண்ட கிளிநொச்சி நபர் ஒருவர் 60 இலட்சம் ரூபாய் பணத்தை இழந்திருந்த நிலையில் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் நபர் ஒருவரை கிளிநொச்சி பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில் டிக் டொக் சமூக வலைத்தளத்தில் விசா விளம்பரத்தை பார்த்து சாந்தன் என்பவர் தொடர்பு கொண்டு தான் பிரான்ஸூல் இருந்து பேசுவதாக கதைத்தார்.

பின்னர் எனது ஆவணங்களுடன் கொழும்புக்கு வர சொன்னதன் அடிப்படையில் கொழும்புக்கு வந்தேன். கொழும்பில்சில நாட்கள் தங்கியிருந்தேன்.

அப்போது எனது ஆவணங்களை கொண்டு வந்து அவர் அனுப்பும் நபரை (லக்சன்) என்பவரை சந்திக்குமாறு கூறினார்.

இதனடிப்படையில் 17.01.2025 அன்று மாலை 7.30 லிருந்து 8.30 ற்கு இடையில் பம்பலபிட்டிய புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒருவர் வந்து சந்தித்தார்.

அவர் எனது ஆவணங்களை பெற்றுக்கொண்டு எனது போனில் இருந்து அனுப்பியவருக்கு போன் செய்து தருமாறு கூறினார்.

அதனடிப்படையில் போன் செய்து கொடுத்தேன். அதன் பின்னர் மறுநாள் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை செய்ய வேண்டும் எனக்கூறி எனது அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.

இதன் பின்னர் சிறுது நேர்த்தில் ஒரு இங்கிலாந்து தொலைபேசியில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதன் பின்னர் எனது தொலைபேசி இலக்கமான 0765322659 வேலை செய்யவில்லை.

பின்னர் மறுநாள் 18.01.2025 அன்று எனது தேசிய சேமிப்பு வங்கி கணக்கில் இருந்த 60 லட்சம் ரூபாய் பணம் தலா 20 லட்சம் ரூபாய் வீதம் மூன்று தடவைகள் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால் நான் உடனடியாக வங்கிக்கு அறிவித்தேன். பின்னர் அவர்கள் எனது NSB PAY என்ற அப் ஊடாகவே பரிமாற்றம் நடந்துள்ளதாக தெரிவித்தனர்.

பின்னர் எனது போனில் உள்ள மேற்படி App உள்நுழைவு செய்ய முடியாமல் கடவுச்சொல் மாற்றப்பட்டிருந்தது. இதன் பின்னர் எனது தொலைபேசி இலக்கம் தொடர்பாக DIALOG வாடிக்கையாளர் சேவை உடன் வினவிய போது எனது SIM E SIM ஆக மாற்றப்பட்டு பாவனையில் உள்ளதாக தெரிவித்தனர்.

எனவே நான் மேற்படி மோசடியை அறிந்து உடனடியாக கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடளித்துள்ளேன்.

அவர்களின் துரிதா செயல்பாடு காரணமாக தலைமறைவாக LMM VISA CONSULTANCY நிறுவனத்தில் பணியாற்றும் நபரை நீதிமன்ற உத்தரவின் மூலம் திறந்த பிடியாணை மூலம் கைது செய்தனர்.

குறித்த நபரிடம் வழங்கிய கணக்கு இலக்கத்திற்கே நான் பணத்தை வைப்பிலிட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார் .

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்