சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 350 கிலோகிராம் கேரள கஞ்சா தும்பலையில் உள்ள முக்கம் கடற்கரையில் வைத்து இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 350 கிலோகிராம் கேரள கஞ்சா தும்பலையில் உள்ள முக்கம் கடற்கரையில் வைத்து இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை பொலிஸாருடன் இணைந்து நடத்தப்பட்ட நடவடிக்கையில், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட கிட்டத்தட்ட 350 கிலோகிராம் எடையுள்ள 154 கேரள கஞ்சா பொதிகளே இவ்வாறு தும்பலையில் உள்ள முக்கம் கடற்கரையில் இன்று (22) அதிகாலையில் கைப்பற்றப்பட்டன.
இதன் மதிப்பு சுமார் 60 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் பருத்தித்துறை பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.