நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'ஜெயிலர் 2' திரைப்படம் நேற்று உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'ஜெயிலர் 2' திரைப்படம் நேற்று உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, மிர்னா மேனன், நமோ நாராயணன், மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், ஹிருத்திக் ரோஷன் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
'ஜெயிலர் 2' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பொக்ஸ் ஓபிஸில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் சக்கைப்போடு போட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.125.25 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவில் மட்டும் ரூ.70.25 கோடியும், வெளிநாடுகளில் ரூ.55 கோடியும் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால், வரும் வார இறுதியில் இப்படத்தின் உலகளாவிய மொத்த வசூல் ரூ.200 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#rajinikanth #jailer2 #nelson #boxofficecollection #sooriyannews #Srilanka #TruthAtAllCosts
