சவூதி அரேபியாவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
சவூதி அரேபியாவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு🔥
“வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தொடர்ந்து துணைநிற்போம்”❤️
சவூதி அரேபிய உச்சநீதிமன்றம் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்துள்ள தீர்மானத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வரவேற்றுள்ளார்.
இந்தத் தீர்மானம் அனோஜன், அவரது குடும்பத்தினர் மற்றும் இந்த வழக்கின் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையுடன் கண்காணித்து வந்த இலங்கை மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொறுமையான இராஜதந்திர நடவடிக்கைகள், நட்பு நாடொன்றின் சட்ட நடைமுறைகளுக்கு வழங்கப்பட்ட மரியாதை மற்றும் இலங்கைப் பிரஜைக்கு ஆதரவாகப் பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட இடையறாத முயற்சிகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தத் தீர்மானம் எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்மானத்தை எடுத்த சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த விவகாரத்தில் பங்களிப்பு வழங்கிய சவூதி அரேபியா மற்றும் இலங்கையின் இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் குழுக்களுக்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
“வாழ்வாதாரத்தைத் தேடி நாட்டை விட்டுச் செல்லும் எந்தவொரு இலங்கையரும் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக ஒருபோதும் உணரக்கூடாது” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் சிரமங்களை எதிர்கொள்ளும் இலங்கைப் பிரஜைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
#AnojanSivarasa #AnuraKumaraDissanayake #SaudiArabia #SriLanka #DeathSentenceOverturned #Diplomacy #Justice #SriLankanNationals
