தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ரசிகர்களின் பேரன்பையும் பெரும் வரவேற்பையும் பெற்று வெற்றி நடைபோட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நடிக்கத் தொடங்கி 50 ஆண்டுகளைக் கடந்த பின்னரும், தனது முதல் திரைப்படத்தில் எத்தகைய ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நடித்தாரோ, அதே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இன்றளவும் ஒவ்வொரு படைப்பிலும் ரஜினிகாந்த் காட்டி வருகிறார்.
அவரது இந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்புதான் அவரது தொடர் வெற்றிப் பயணத்தின் அடிப்படையாகும் என தெரிவித்துள்ளார்.
தலைமுறைகள் கடந்தும் அவர் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பிற்கு இதுவே முதற்காரணமாகும்.
புகழின் உச்சத்தை அடைந்த பின்னரும், நான்கு தலைமுறை இயக்குநர்களுடன் இணைந்து நடித்த பின்னரும், ஒவ்வொரு திரைப்படத்தையும் ஒரு புதிய தொடக்கமாகக் கருதி அவர் உழைக்கிறார்.
இதன் காரணமாகவே, காலங்கள் மாறினாலும், திரைமொழியும் தொழில்நுட்பமும் மாறினாலும், மக்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அன்புப் பிணைப்பு ‘ஜெயிலர் 2’ வெற்றி வரை மேலும் வலுப்பெற்று வருகிறது என சீமான் தனது பதிவில் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
#Seeman #rajinikanth #jailer2 #sooriyannews #Srilanka #TruthAtAllCosts