அட்டாளைச்சேனை 01, 10ஆம் பிரிவுகளில் வீதி மின்விளக்குகளைப் புதுப்பிக்கும் பணிகள் முன்னெடுப்பு!
அட்டாளைச்சேனை 01, 10ஆம் பிரிவுகளில் வீதி மின்விளக்குகளைப் புதுப்பிக்கும் பணிகள் முன்னெடுப்பு!
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் தலைமையில், அட்டாளைச்சேனை 01 மற்றும் 10ஆம் பிரிவுகளுக்குட்பட்ட வீதிகளில் மின்விளக்குகளைப் புதிதாகப் பொருத்துதல் மற்றும் பழுதடைந்த மின்விளக்குகளைத் திருத்தியமைக்கும் பணிகள் இன்று (01) முன்னெடுக்கப்பட்டன.
பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் அஸ்வர் ஸாஹிஹ் அவர்களின் நேரடி முன்னெடுப்பில், நீண்டகாலமாகத் திருத்தப்படாமல் காணப்பட்ட வீதி மின்விளக்குகளைச் சீரமைத்தல் மற்றும் தேவையான இடங்களில் புதிய மின்விளக்குகளைப் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நடவடிக்கையால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தமது பிரதேசத்தின் வீதி விளக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்த கௌரவ தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
