Breaking News

வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் சமூக சேவைத் திணைக்களம் மற்றும் நன்னடத்தை, பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்புச் சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட பிரிவுகளுக்கான 27 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30) வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

 வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் சமூக சேவைத் திணைக்களம் மற்றும் நன்னடத்தை, பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்புச் சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட பிரிவுகளுக்கான 27 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30) வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் நானும் கலந்துகொண்டு, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுடன் இணைந்து நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தேன்.


இதன்போது, சமூக சேவை உத்தியோகத்தர் தரம் II பதவிக்கு 13 பேருக்கும், அலுவலக உதவியாளர் பதவிக்கு 8 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன. அத்துடன், வடக்கு மாகாண நன்னடத்தை, பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்புச் சேவைகள் திணைக்களத்தின் கீழ் ஆறு பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.


நியமனம் பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


“அரச சேவை என்பது மக்களுக்கான சேவையாகும். புதிதாக நியமனம் பெற்றுள்ள அனைவரும் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, சமூக சேவைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்புத் துறைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள், உதவி தேவைப்படும் மக்களினதும் பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படும் சிறுவர்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, மனிதநேயத்துடன் தமது கடமைகளை முன்னெடுக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அரச சேவையை வினைத்திறனுடனும் சிறப்பாகவும் முன்னெடுப்பதில் ஒவ்வொருவரும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தேன்.


சமூக நலன்புரிச் சேவைகளை வலுப்படுத்துதல், சிறுவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துதல் மற்றும் அரச நிர்வாகச் செயற்பாடுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.


புதிதாக நியமனம் பெற்றுள்ள அனைவரும் தமது கடமைகளைச் சிறப்பாக முன்னெடுத்து, வடக்கு மாகாண மக்களுக்குத் தரமான அரச சேவையை வழங்குவதற்குப் பங்களிப்பார்கள் என நம்புகிறேன்.


புதிய பொறுப்புகளை ஏற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!


---------++++++-----------


උතුරු පළාත් සභාව යටතේ ක්‍රියාත්මක වන සමාජ සේවා දෙපාර්තමේන්තුව සහ පරිවාස, ළමාරක්ෂක හා ළමා රැකවරණ සේවා දෙපාර්තමේන්තුව ඇතුළු අංශ සඳහා නව නිලධාරීන් 27 දෙනෙකුට පත්වීම් ලිපි ප්‍රදානය කිරීමේ උත්සවය අද (30) උතුරු පළාත් ප්‍රධාන ලේකම් කාර්යාල ශ්‍රවණාගාරයේදී පැවැත්විණි.


මෙම අවස්ථාවට මා ද සහභාගී වූ අතර, උතුරු පළාත් ප්‍රධාන ලේකම් තනුජා මුරුගේසන් මහත්මිය සහ අදාළ අමාත්‍යාංශ හා දෙපාර්තමේන්තුවල ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් සමඟ එක්ව නව පත්වීම්ලාභීන් වෙත පත්වීම් ලිපි ප්‍රදානය කළෙමි.


මෙහිදී, II ශ්‍රේණියේ සමාජ සේවා නිලධාරී තනතුරු සඳහා 13 දෙනෙකුටත්, කාර්යාල සහායක තනතුරු සඳහා 8 දෙනෙකුටත් පත්වීම් පිරිනමන ලදී. ඊට අමතරව, උතුරු පළාත් පරිවාස, ළමාරක්ෂක හා ළමා රැකවරණ සේවා දෙපාර්තමේන්තුව යටතේ තවත් හය දෙනෙකුට පත්වීම් පිරිනමන ලදී.


නව පත්වීම් ලැබූ සියලු දෙනාටම මගේ හෘදයාංගම සුබපැතුම් පිරිනමමි.


“රාජ්‍ය සේවය යනු ජනතාවට සේවය කිරීමයි. නව පත්වීම් ලැබූ සියලු නිලධාරීන් තමන්ට පැවරී ඇති වගකීම් කැපවීමෙන්, අවංකභාවයෙන් සහ වගකීම්සහගතව ඉටු කළ යුතුය. විශේෂයෙන්ම, සමාජ සේවා සහ ළමා ආරක්ෂණ ක්ෂේත්‍රවල සේවය කරන නිලධාරීන්, සහාය අවශ්‍ය ජනතාවගේත් රැකවරණය හා ආරක්ෂාව අවශ්‍ය දරුවන්ගේත් සුබසාධනයට ප්‍රමුඛත්වය ලබා දෙමින් මානුෂීය හැඟීමෙන් යුතුව තම රාජකාරි ඉටු කළ යුතුය. ජනතාවගේ විශ්වාසය දිනා ගනිමින්, රාජ්‍ය සේවය වඩාත් කාර්යක්ෂමව හා ඵලදායීව පවත්වාගෙන යාම සඳහා සෑම නිලධාරියෙකුම තම දායකත්වය ලබා දිය යුතුය” යනුවෙන් මම අවධාරණය කළෙමි.


සමාජ සුබසාධන සේවා ශක්තිමත් කිරීම, ළමයින්ගේ අයිතිවාසිකම් සහ ආරක්ෂාව තහවුරු කිරීම මෙන්ම රාජ්‍ය පරිපාලන කටයුතු වැඩිදියුණු කිරීම සඳහා කැපවීමෙන් සේවය කරන රාජ්‍ය නිලධාරීන්ගේ දායකත්වය ඉතා වැදගත් වේ.


නව පත්වීම් ලැබූ සියලු නිලධාරීන් තම වගකීම් කාර්යක්ෂමව හා කැපවීමෙන් ඉටු කරමින්, උතුරු පළාතේ ජනතාවට ගුණාත්මක රාජ්‍ය සේවාවක් ලබාදීම සඳහා අර්ථවත් දායකත්වයක් ලබා දෙනු ඇතැයි මම විශ්වාස කරමි.


නව වගකීම් භාරගත් සියලු දෙනාටම මගේ සුබපැතුම්!


#RamalingamChandrasekar #NorthernProvince #PublicService #SocialServices #ChildProtection