Breaking News

இரட்டை வெற்றிகளை பெற்ற நாகர்கோவில் வென்மதி விளையாட்டு கழகம்..!


இரட்டை வெற்றிகளை பெற்ற நாகர்கோவில் வென்மதி விளையாட்டு கழகம்..!




யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு நடுக் குடத்தனை வேளாங்கன்னி மாதா ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு நடுக்குடத்தனை செல்வா விளையாட்டு கழகம் நடாத்திய வட மாகாண ரீதியான மென்பந்து துடுப்பாட்ட போட்டியின் இறுதிப் போட்டி நேற்றுசெவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் செல்வா விளையாட்டு கழக மைதானத்தில் அதன் தலைவர் T. நிதேசன் தலைமையில் இடம்பெற்றது.


இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு தேசியக் கொடி, கழக கொடி என்பன ஏற்றப்பட்டதனை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின.

இறுதிப் போட்டியில் பொற்பதி சென் பீட்டர்ஸ் அணியும், நாகர்கோவில் வென்மதி விளையாட்டு கழகம் மோதின. இதில் நாகர் கோவில் வென்மதி விளையாட்டு கழகம் வெற்றிவாகை சூடியது.

அதனை தொடர்ந்து இடம்பெற்ற சவால் கிண்ணத்திற்கான போட்டியில் குடத்தனை வடக்கு செல்வா விளையாட்டு கழகமும், நாகர்கோவில் வெண்மதி விளையாட்டு கழகமும் மோதின. இதிலும் நாகர் கோவில் வெண்மதி விளையாட்டு கழகம் வெற்றிவாகை சூடியது.


கரப்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில் இமையாணன் வல்வை அணியும் மோதின. இதில் இமையாணன் வல்வை அணி வெற்றிபெற்றது.

வெற்றிபெற்ற கரப்பதாட்ட அணியான இமையானம் வல்வை அணிக்கு 

60000/- பண பரிசும், கேடயமும், 2 ம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட வெண்மதி விளையாட்டு கழக அணிக்கு 40000/- பண பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. 

துட்டுப்பாட்டத்தில் வெற்றிபெற்ற வெண்மதி அணிக்கும், 2 ம் இடம் பெற்ற பொற்பதி சென் பீற்றர்ஸ் அணிக்கும் கேடயங்கள் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கேடயம், பதக்கம், பண பரிசில்களை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மணல்காடு பங்குத் தந்தை வணபிதா குருஷ், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மருதங்கேணி காவல் நிலைய பொறுப்பு அதிகாரி காவல்துறை பரிசோதகர் கெலும் பண்டார, கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்ட கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிதிகள் ஆகியோர் வழங்கிவைத்தனர்.

போட்டிகளை கண்டு களிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் கிராம, அயல் கிராம மக்கள் என பலரும் வருகைதந்திருந்

தனர்.