Breaking News

காழி நீதிபதிகளின் சபை உறுப்பினராக எம் ஐ அமீர் (நழீமி) நியமனம்..!

 காழி நீதிபதிகளின் சபை உறுப்பினராக எம் ஐ அமீர் (நழீமி) நியமனம்..!



சம்மாந்துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரியும் முன்னாள் அமைச்சுச் செயலாளருமான எம் ஐ அமீர் (நழீமி), இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவினால் காழி நீதிபதிகளின் சபை (Board of Quazis) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


முன்னாள் மஜ்லிஷ் அஷ்-ஷூறா அமீராகவும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றிய இவரது நீண்டகால அனுபவமும் ஆளுமையும் இப்புதிய பொறுப்பிற்கும் பெரும் பலமாக அமையும்.


சமூகத்திற்கு இவர் ஆற்றிவரும் உயரிய சேவைகள் மேலும் தொடர, சம்மாந்துறை மண்ணின் சார்பிலும் மக்களிடையேயும் எங்களது உளம் கனிந்த வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்.