Breaking News

200 மில்லியன் ரூபா செலவில் கல்லாறு – பேய்பாறைப்பிட்டி வீதி புனரமைப்பு ஆரம்பம்

 200 மில்லியன் ரூபா செலவில் கல்லாறு – பேய்பாறைப்பிட்டி வீதி புனரமைப்பு ஆரம்பம்


———————--——————--------------------------


கிளிநொச்சி கல்லாறு – பேய்பாறைப்பிட்டி வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.


போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கிராமிய வீதிகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 2.47 கிலோமீற்றர் நீளமான குறித்த வீதி புனரமைக்கப்படவுள்ளது.


வீதி புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்றது.


இதன்போது, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் மற்றும் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன் ஆகியோர் கலந்துகொண்டு வீதி புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.


குறித்த வீதி புனரமைப்பின் மூலம் அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் இது பங்களிப்புச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நிகழ்வில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாவட்ட பொறியியலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.