Breaking News

கட்டைக்காட்டில் சந்தேகத்திற்குரிய பெல்ட் ஹோல்டர் கண்டெடுப்பு மருதாங்ககேணி போலீசார் விசாரணை!



கட்டைக்காட்டில் சந்தேகத்திற்குரிய பெல்ட் ஹோல்டர் கண்டெடுப்பு மருதாங்ககேணி போலீசார் விசாரணை!


:


கட்டைக்காடு பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் முற்றத்தைச் சுத்தம் செய்தபோது, சந்தேகத்திற்குரிய பெல்ட் ஹோல்டர் (Belt Holder) ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




இன்று (2026.08.08) மதியம் சுமார் 12:40 மணியளவில், குறிப்பிட்ட நபர் தனது வீட்டு முற்றத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே இந்தப் பெல்ட் ஹோல்டரைக் அவதானித்துள்ளார்.




 இதுகுறித்து உடனடியாக மருதாங்ககேணி காவல் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டது.




தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருதாங்ககேணி காவல் நிலையப் போலீசார், மதியம் 1:00 மணியளவில் அப்பகுதியைப் பார்வையிட்டு, வெளிப்புறப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.




சோதனையின் போது, அந்த பெல்ட் ஹோல்டருக்குள் சில பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 



சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பின்னர், பெல்ட் ஹோல்டரை மீட்டு மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்த உள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்