Breaking News

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மீண்டும் திரையுலகில் களமிறங்கிய நடிகை சமந்தா, அத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சினிமாவில் இருந்து சிறிய இடைவெளி எடுக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சமந்தா விரைவில் பிரபலமான சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரைப்படங்களிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தாலும், சின்னத்திரை மூலமாக ரசிகர்களைச் சந்திக்க சமந்தா தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

எனினும், அவர் தொகுத்து வழங்கவுள்ள நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இதனால், சமந்தா சின்னத்திரையில் புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

#Samantha #SamanthaRuthPrabhu #MaaIntiBangaram #sooriyannews #Srilanka #TruthAtAllCosts