Breaking News

உலக்கை தேய்ந்து உளியாகினாலும் பருவாயில்லை, கோடாரிக்காம்பாகும் நிலை!!

 உலக்கை தேய்ந்து உளியாகினாலும் பருவாயில்லை, கோடாரிக்காம்பாகும் நிலை!!



செம்மணியானது தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பிற்கான மிகமுக்கிய சாட்சிகளில் பிரதானமானது. அதற்குள் சிவலிங்கத்தை வைத்து, போராட்டங்கள் மீது காவி காடையர்களை ஏவி மடைமாற்றம் நிகழ்த்தப்படும் என்பது எதிர்வுகூறப்பட்ட ஒன்றுதான். 


ஐங்கரநேசன் முதல் கஜேந்திரகுமார் வரை ஆறுதிருமுருகன் ரசிகர்களாக இருப்பதால், ஆறுதிருமுருகனின் அடாவடித்தனத்தை எதிர்த்து கேள்விகேட்கத் தங்குகின்றனர். 


ஆறுதிருமுருகன் அல்ல ஆறுமுகனே வந்தாலும், தமிழுக்கும் அதன் நிலத்திற்கும் அதன் இனத்தின் இருப்பிற்கான போராட்டங்களுக்கும் ஆபத்து என்றால் வலுவாக எதிர்ப்போம். "உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு" என்று உயிரிலும் மேலாக தாய்த் தமிழை நேசிக்கும் மக்களிடம், சமய முரண்களை திணிப்பதை அனுமதிக்கக் கூடாது. 


கடந்த வருடம் உருவான செம்மணி அணையாவிளக்கு போராட்டக் குழுவானது, தனிநபர் பதவி பிரச்சினைகளாலும், புலம்பெயர் அமைப்புகளின் ஊடுருவல், தங்களை சிவில் சமூக உறுப்பினர்களாக சொல்லுமம் சிலரின் எல்லை மீறிய ஊடுருவல் என சில சில்லறைகளால் சிதைக்கப்பட்டு இன்று முழுமையாக செயலிழந்து போயுள்ள நிலையில் (இதுவும் காவிகளால் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட நிகழ்த்தப்பட்ட சிதைப்பாகவே தெரிகிறது), இன்று தனித் தனி தரப்புகளால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட போராட்டகளையும் காவிகளைக் கொண்டு குழப்பி, இனிமேல் போராட்டங்கள் இடம்பெறக் கூடாது அல்லது போராட வேண்டுமென்றால் ஆறுதிருமுருகன், சிவில் சமூகம் என்ற பெயரில் இருக்கும் ஒற்றர்களிடம் அனுமதி பெறவேண்டும் என்பது மாதிரியான தோற்றப்பாடு உருவாக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. 


ஒருவருடம் கழித்து இதே இடத்தில் பிரச்சினை வேறுவடிவில் கொண்டுவரப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தில் ஆறுதிருமுருகனுக்குப் பின்னால் உள்ள தரப்பு யார் என் கேள்வி இயல்பாகவே எழுகிறது.


மீண்டும் சொல்கிறோம், ஐயன் வள்ளுவன் சொன்னது போல


" செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்"


ஆகஸ்ட் 15, 2026

ஆதவன் துலா


குறிப்பு:


ஆறுதிருமுருகன் அவர்களின் திட்டத்தில் மண்நிரப்பப்பட்டு கட்டடம் அமைப்பதற்கான வேலைப்பாடுகள் தொடங்கப்பட்டிருந்த நிலையில், 31 யூலை 2025 இதை பதிவாக போட்டு அம்பலப்படுத்தியிருந்தேன். மறுநாள் "கட்டுமாணப்பணி நிறுத்தப்பட்டுள்ளது" என்று ஆறுதிருமுருகன் அவர்கள் அறிவித்ததையடுத்து அதை மற்றவர்கள் பார்வையிடமுடியாத பதிவாக onlyme கொடுத்து வைத்திருக்கிறேன். 


இன்று அதே மண்நிரப்பப்ட்ட பிரதேசத்தை "கோயில் இடம்" என்று சொல்லி ஒரு காவிக் காடையன் போராட்டத்தை குழப்பும் வேலையில் இறங்கியிருக்கிறான்.