அமைதியாக இடம்பெற்ற பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு...!
அமைதியாக இடம்பெற்ற பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு...!
பருத்தித்துறை பிரதேச சபை அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் இன்று மாலை 2:30 மணியளவில் பருத்தித்துறை பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் யுத்ததித்தில் மரனித்த மா வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமாகியது.
இதில் கடந்த கூட்ட அறிக்கை ஆராப்பட்டு திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டத்தனை தொடர்ந்து சபையின் நிதி தொடர்பான அனுமதிகளும், நிதி குழு கூட்ட அறிக்கைகழும் ஆராயப்பட்டு அனுமதிகளும் வழங்கப்பட்டன.
பின்னர் பருத்தித்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளின் தரம் மற்றும் தரம் இல்லாத வீதிகலால் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாட பட்டது
அதனை தொடர்ந்து பிரதேச சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடபட்டது இதில் அனுமதி அற்ற கட்டிடங்கள் மற்றும் சட்டவிரோத கழிவகற்றல் தொடர்பாகவும் ஆலோசிக்க பட்டு இதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்க
பட்டது.
