செப்டம்பர் 6 முதல் நாடு தழுவிய பிரசாரக் கூட்டங்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமை தாங்குவார்! ............
செப்டம்பர் 6 முதல் நாடு தழுவிய பிரசாரக் கூட்டங்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமை தாங்குவார்!
............
தேசிய மக்கள் சக்தியின் (NPP) சார்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் செப்டம்பர் 6 முதல் நாடு தழுவிய பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கட்சியின் தொடர்ச்சியான அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட அளவில் இக்கூட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார். மேலும், கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் பிரதேச சபைகளை மறுசீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அதிருப்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுவதை நிரூபிக்க, அவர்கள் வீதியில் இறங்கி மக்களைத் திரட்டிப் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ சவால் விடுத்துள்ளார்.
