காணமல் போனோர் அலுவலகத்தில் 23 ஆயிரம் விண்ணப்பங்கள் .9819 முறைப்பாடுகள் விசாரணை நிறைவு.
காணமல் போனோர் அலுவலகத்தில் 23 ஆயிரம் விண்ணப்பங்கள் .9819 முறைப்பாடுகள் விசாரணை நிறைவு.
* 31 பேர் கண்டுபிடிப்பு
*இராணுவத்திடம் இருந்து எவரையும் கண்டுபிடிக்கவில்லை.
*யாழில் மட்டும் 4 பேர் கண்டுபிடிப்பு.
*மரபணு மாதிரிகளை சேகரிக்க விசேட கவனம்.
அலுவலகத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மகேஷ் கட்டுலந்த யாழில் தெரிவிப்பு.
காணாமல் போனோர் அலுவலகத்தில் இதுவரை 23 ஆயிரத்து 352 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் 9819 விண்ணப்பங்களுகு பூர்வாங்க விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாக காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மகேஷ் கட்டுலந்த தெரிவித்தார்.
நேற்று யாழில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இதுவரை 23,352 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் 16, 966 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டது.
அவற்றில் 9819 முறைப்பாடு களுக்கான பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் 2ஆயிரம் முறைப்பாடுகளுக்கு மேலதிக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் முடிவடைந்த பாதுகாப்பு தரப்பினர் உற்பட்ட 800 பேருக்கு விளக்கக் கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையில் 7726 பேருக்கு அவர்களின் சம்மதத்துடன் இடைக்கால கொடுப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை முறைப்பாடு கிடைக்கப்பெற்றவர்களில் 31 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரிடம் இருந்து எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கண்டுபிடிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டிலிருந்து மூவரும் யாழ்ப்பாணம் நான்கு பேர் திருகோணமலை அனுராதபுரம் ஒருவர், கம்பஹா இருவர் மட்டக்களப்பு மூவர், மற்றும் களுத்துறை ,அம்பாந்தோட்டை, வவுனியா ,குருநாகல், மாத்தறை புத்தளம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
செம்மணி மனிதப் புதைக்குழி மூன்று கட்டங்களாக சுமார் 110 நாட்கள் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றிருக்கின்ற நிலையில் இதுவரை 5 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது.
584 மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் அவர்களின் உறவினர்களின் இரத்த மாதிரிகளை சேகரித்து மரபணு சோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
