Breaking News

மாபெரும் பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனை முயற்சி

 மாபெரும் பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனை முயற்சி 



உலக அரங்கில் இலங்கையின் பெருமையை உயர்த்தவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வான சங்கமம் 2026 ஐ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் என்ற வகையில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் உலக அளவில் பல்வேறு நாடுகளில் கலை இலக்கிய ஆராய்ச்சி மாநாடுகள் மற்றும் உலக சாதனை நிகழ்ச்சிகளை நடத்தும் இந்தியாவைச் சேர்ந்த சங்கமம் குளோபல் அகடமி மற்றும் இலங்கையைச் சேர்ந்த சங்கமிழ் லியா ஹொலிடேஸ் இணைந்து ஏற்பாடு செய்யும் 

உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனை முயற்சியை பாராட்டுகிறேன்.


தென்னிந்தியாவில் நடைபெற்ற அயலகத் தமிழர்களின் மாநாட்டில் பங்கேற்றபோது, இந்தியா–ஆசியா–இலங்கை வர்த்தகம் மற்றும் தொழில் சம்மேளனத் தலைவர் மற்றும் சங்கமம் குளோபல் அகடமி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினேன் . அந்த சந்திப்பின் போது, இலங்கையின் கலாசாரப் பெருமையை உலக அரங்கில் உயர்த்தும் வகையில் இந்த உலகச் சாதனை முயற்சியை

இலங்கையில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.


இந்த மாபெரும் நிகழ்வில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த சர்வதேச நிகழ்வு 2026 ஜூன் 14ஆம் தேதி காலை 6 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.

இது வெறும் உலகச் சாதனை முயற்சியல்ல; கலாசாரம், ஒற்றுமை மற்றும் இலங்கை–இந்தியா நட்புறவை உலகிற்கு எடுத்துக்காட்டும் பெருமைமிகு நிகழ்வாகும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நேரில் கண்டு களிக்க பொதுமக்களையும் ஊடகங்களையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.

இதன் போது

இந்தியாவின் சங்கமம் குளோபல் எகடமியின் நிறுவனர் மற்றும் தலைவர்

K. தினேஷ் குமார்  

இலங்கையின்

சங்கமிழ் தியா ஹொலிடேஸ் நிர்வாக இயக்குனர்

சுமாலி தசநாயக்கா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்




நன்றி