Breaking News

யாழ் செம்பியன் பற்றில் "உப்புக் காற்று" பாடல் இறுவட்டு கோலாகலமாக வெளியீடு!




யாழ் செம்பியன் பற்றில் "உப்புக் காற்று" பாடல் இறுவட்டு கோலாகலமாக வெளியீடு!








யாழ் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு மண்ணின் பழமையையும், அங்கு வாழும் மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் "உப்புக் காற்று" எனும் பாடலின் இறுவட்டு (CD) அண்மையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.




உலகப் புகழ்பெற்ற செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் வருடாந்த நற்கருணைத் திருவிழா அன்று மாலை 3:00 மணியளவில் இப்பாடல் இறுவட்டு பக்திப்பூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது.




மண்ணின் கதையைச் சொல்லும் வரிகள்

செம்பியன்பற்று வடக்கு மண்ணின் பாரம்பரியத்தையும், கடலோர மக்களின் அன்றாட வாழ்வியல் யதார்த்தங்களையும் மிகவும் சிறப்பான முறையில் எழுத்து வடிவில் செதுக்கியுள்ளார் ஊடகவியலாளர் பூ. லின்ரன். இவரது ஆழமான வரிகள் பாடலுக்கு வலுசேர்த்துள்ளன.




கவர்ந்திழுக்கும் குரலும் இசையும்

இப்பாடலை (கடலோன்) ஜெனோசன் தனது இயற்கைத்தன்மை மாறாத, தரமான குரலால் பாடியுள்ளார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ள இவரது குரல்வளம், தற்போது மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அத்துடன், இப்பாடலுக்கான வரி வடிவமைப்பு (Typography/Layout) பணிகளையும் இவரே மேற்கொண்டுள்ளார்.




பாடலுக்கு உகந்தவாறு மெய்சிலிர்க்க வைக்கும் இசையமைப்பை வழங்கி, ஒலிக்கலவை (Mixing) மற்றும் ஒலித்தொகுப்பு (Mastering) பணிகளை நுட்பமான முறையில் கையாண்டுள்ளார் ஆர்வின் பிரசாத்.




மண்ணின் பெருமையைப் பேசும் இந்த "உப்புக் காற்று" பாடல், வெளியானது முதல் உள்ளூர் மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது