Breaking News

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முழு நாடும் ஒன்றாக அகன்று செல் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம்



தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முழு நாடும் ஒன்றாக அகன்று செல் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் 




தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முழு நாடும் ஒன்றாக அகன்று செல் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடக்கமும் நடை பயணமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. 


தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் யாழ்ப்பாண பிரதி பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக முனியப்பர் கோவில் முன்றலில் போதை விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றது.


அதனை தொடர்ந்து போதை விழிப்புணர்வு நடை பவனி முனியப்பர் கோவிலடியிலிருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் மாவடட செயலகம் வரை சென்று நிறைவடையவுள்ளது 


இதில் கடற்றொழில் நீரியல் வளத் துறை அமைச்சர் சந்திரசேகர், யாழ்ப்பாணம் போதன வைத்திய சாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, கிளீன் ஸ்ரீலங்கா பணிப்பாளர் கபிலன், இளைஞர் சேவை மன்ற அதிகாரிகள், இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்