Breaking News

சமாசக் கட்டிடப் பின்னடைவு மற்றும் முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை: சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவு புதிய வடமராட்சி வடக்கு சமாச தலைவர்


சமாசக் கட்டிடப் பின்னடைவு மற்றும் முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை: சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவு புதிய வடமராட்சி வடக்கு சமாச தலைவர்......!




:

சமாசத்திற்குச் சொந்தமான தற்போதைய கட்டடம் முறையான பராமரிப்பின்றி, மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் பாழடைந்து காணப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தற்போதைய நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் இக்கட்டிடம் விலங்கினங்கள் மற்றும் ஏனைய ஜீவராசிகளின் புகலிடமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.




கடந்த காலங்களில், குறிப்பாக சுனாமி அனர்த்தத்திற்குப் பிற்பட்ட காலப்பகுதியில், இந்தச் சமாசத்திற்குப் பல்வேறு வாழ்வாதார உதவிகள், வலைகள் மற்றும் மீன்பிடித் தொழில் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டன. அத்துடன், பெருமளவிலான நிதியும் கிடைக்கப்பெற்றது. இதன் மூலம் சங்கங்கள் தன்னிச்சையாகவும் வலுவாகவும் இயங்கும் அளவுக்குச் சமாசம் பெரும் வருமானத்தை ஈட்டித் தந்தது.




இருப்பினும், கடந்த காலப் பெருமையுடன் இன்றைய சூழ்நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அங்கு பெருமளவில் நிதி மற்றும் பொருள் முறைகேடுகள் (ஊழல்) இடம்பெற்றிருப்பது தெளிவாகப் புலனாகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.




விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும்:

கடந்த 2005ஆம் ஆண்டுக்கு பிந்தைய காலப்பகுதியில் சமாசத்திடம் இருந்த சொத்துக்கள், உபகரணங்கள் மற்றும் நிதிப் பயன்பாடு குறித்து தற்போது விரிவான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




எந்தெந்த நிர்வாகக் குழுக்கள் பொறுப்பில் இருந்தபோது என்னென்ன பொருட்கள் மற்றும் நிதிகள் வரப்பெற்றன?

அவை எக்காலப்பகுதியில், யாரால் இல்லாமல் செய்யப்பட்டன அல்லது முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டன?

என்ற கோணத்தில் முறையான தேடல்களும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முறைகேடுகளுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக மிக விரைவில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன