மாமுனை கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் சிறப்பான முறையில் ஆரம்பம்!
மாமுனை கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் சிறப்பான முறையில் ஆரம்பம்!
தூய்மையான இலங்கை (Clean Srilanka) வேலைத்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (23) மாமுனை கடற்கரை பகுதியில் காலை 8 மணியளவில் மிக சிறப்பாக ஆரம்பமானது
.
”சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக சுத்தமாகப் பேணுவதற்கும் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடையம்.
இதன்போது அதிகளவான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள், கண்ணாடியிலான கழிவுப் பொருட்கள், இலகுவில் அழிந்து போகக்ககூடிய கழிவுப் பொருட்கள் என ஏராளமான கழிவுகள் உரிய முறையில் அகற்றப்பட்டுள்ளதோடு தொடர்ந்துவரும் காலங்களிலும் நிலைபேறான தூய்மையாக்கலை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் வேலை திட்டத்தில் இராணுவத்தினர் செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மாமுனை கலைமகள் விளையாட்டு கழகத்தினர் மாமுனை கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
