கைலாசபதி அரங்கில் மண்ணில் புதைந்த மலை கவிதை நூல் வெளியீடு .
கைலாசபதி அரங்கில் மண்ணில் புதைந்த மலை கவிதை நூல் வெளியீடு .
யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவி செல்வி வீனா.டிதுர்ஷா எழுதிய மண்ணில் புதைந்த மலை கவிதை நூல் வெளியீடு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம் பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் த.யதுர்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினர் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பி கலந்து கொண்டதுடன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்
சிறப்பு விருந்தினர்களக பேராசிரியர் நா. பிரதீபராஜா பீடாதிபதி. கலைப்பீடம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும்
பேராசிரியர் செல்வி செ. சிவசுப்பிரமணியம் தலைவர், தமிழ்த்துறை அவர்களும் கலந்து கொண்டனர்.
நூல் அறிமுகவுரையை வேல் நந்தகுமார் விரிவுரையாளர். கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நிகழ்த்தியதுடன் சிறப்புரை
அரசியல் ஆய்வாளர் ச.நிலாந்தன் நிகழ்த்தினார்.
இன் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
