Breaking News

அவருடன் நடித்ததே பெருமை!" தளபதி விஜய் குறித்து நடிகை மமிதா பைஜூ வெளியிட்ட நெகிழ்ச்சி தகவல்!

 "அவருடன் நடித்ததே பெருமை!" தளபதி விஜய் குறித்து நடிகை மமிதா பைஜூ வெளியிட்ட நெகிழ்ச்சி தகவல்!




திரைப்படப் நேர்காணலில் ஒன்றில் பேசிய பிரபல நடிகை மமிதா பைஜூ, நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த அனுபவங்கள் குறித்துப் பூரிப்புடன் பகிர்ந்துள்ளார். 


தான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்று குறிப்பிட்ட அவர், அவருடன் திரையைப் பகிர்ந்து கொண்டதற்காகத் தன்னை மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவராக உணர்வதாகத் தெரிவித்துள்ளார். 


மேலும் படப்பிடிப்புத் தளத்தில் விஜய் மிகவும் அன்பாகவும் நட்பாகவும் பழகியதாகவும், தன்னிடம் மிகவும் இயல்பாகவும் சகஜமாகவும் பேசுவார் என்றும் கூறினார். 


 தளபதி விஜய்யைச் சந்தித்ததும் அவருடன் சேர்ந்து நடித்ததும் தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என மமிதா பைஜூ நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


#Sooriyannews #srilanka #TruthAtAllCosts #india #newsupdate #September2026 #BreakingNews #LatestNews #sportscards