கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்றையதினம் சாவகச்சேரி பிரதேச சபையின் தலைமை அலுவலக முன்றலில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
கொடிகாமம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்றையதினம் சாவகச்சேரி பிரதேச சபையின் தலைமை அலுவலக முன்றலில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
அதாவது தமது வாழ்வாதரம் பாதிக்கும் வகையில் கொடிகாமம் நகரை அண்டிய பிரதேசங்களில் தரித்து நின்று பிக்மீ செயலி மூலம் வாடகைக்கு பயணிகளை ஏற்றிச் செல்வதை கட்டுப்படுத்தக்கோரியே இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதனால் அங்கு சற்று குழப்ப நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதேசசபைக்கு வருகை தந்து தவிசாளர் தலைமையில் கூட்டம் ஒன்று உடனடியாக ஒழுங்கு செய்யப்பட்டு முச்சங்கரவண்டி உரிமையாளர்களின் பிரச்சனை தொடர்பில் ஆராயப்பட்டது.