Breaking News

திருக்கோவிலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனவழிப்பிலிருந்து உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தது.

 திருக்கோவிலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனவழிப்பிலிருந்து உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தது. 



2009 இறுதிப் பொருன்போது சிறீலங்கா அரசு உணவுத் தடையை விதித்து மக்களை பட்டினிச் சாவைநோக்கித் தள்ளியது. அந்நேரத்தில் மக்களின் உயிர்காக்க நெல்லைக்குற்றி அரிசியாக்கி தண்ணீரில் கஞ்சியாக்க் காச்சி அதனையே உணவாக உண்டு உயிரைக் காத்தனர் சுமார் 350000 திற்கும் மேற்பட்ட மக்கள். 


இக்கொடூர சம்பவத்தை நினைவுகூரும் வகையிலும் பட்டினிச்சாவைநோக்கி மக்களைத் தள்ளிய அரசையும் அந்த அரசுக்கு முட்டுக்கொடுத்த தேசத்துரொகி டக்களஸ் போன்றவர்களது முத்திரையை கிழித்து உண்மைகளை அம்பலப்படுத்தவும் இந்த இனவழிப்புக்குற்றங்களுக்குச் சர்வதேச விசாரணை வேண்டும் என்பதில் இன்றும் தமிழர் உறுதியாக உள்ளார்கள் என்பதனை வெளிப்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வருடம்தோறும் முன்னெடுக்கப்படுகின்றது. 


அந்த செயற்பாட்டின் ஒரு பகுதியாக திருக்கோவில் 

காயத்திரி கிராமத்திலுள்ள கௌரி அம்மன் கோவில் முன்றலிலும் கஞ்சி காச்சி மக்களுக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. 


இந்நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஸ்பராசா துசானந்தன் அவர்களது ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கலந்து கொண்டிரு

ந்தார்.