Breaking News

செப்டம்பர் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரி கொடுப்பனவு வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

 செப்டம்பர் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரி கொடுப்பனவு வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 999,053 குடும்பங்களுக்கு 9.18 பில்லியன் ரூபாயும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 213,335 குடும்பங்களுக்கு 2.12 பில்லியன் ரூபாயும் இவ்வாறு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளன.

இந்தக் கொடுப்பனவுகளைப் பயனாளிகள் வரும் 17ஆம் திகதி முதல் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.