Breaking News

ஊடகவியலாளர்களுக்கான 'AI' பயிற்சி; சிலோன் மீடியா போரத்தின் முயற்சிக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆதரவு...!

 ஊடகவியலாளர்களுக்கான 'AI' பயிற்சி; சிலோன் மீடியா போரத்தின் முயற்சிக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆதரவு...!



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் (Faculty of Technology) புதிய பீடாதிபதியாகக் கடந்த மார்ச் மாதம் நியமனம் பெற்ற கலாநிதி றிபாய் காரியப்பரை, சிலோன் மீடியா போரத்தின் (Ceylon Media Forum) தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் (25) அவரது காரியாலயத்தில் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.


இந்த சினேகபூர்வ சந்திப்பின்போது, அம்பாரை பிராந்தியத்தில் கடமையாற்றும் ஊடகவியலாளர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், தற்காலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தொடர்பான விசேட கற்பித்தல் செயலமர்வு ஒன்றினை பல்கலைக்கழகத்தின் ஊடாக ஏற்பாடு செய்து தருமாறு சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார்.


இக்கோரிக்கையினை மிகுந்த ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்ட பீடாதிபதி கலாநிதி றிபாய் காரியப்பர், சமகால ஊடகத்துறையில் AI தொழில்நுட்பத்தின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், இதற்கான விசேட செயலமர்வினை எதிர்வரும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் பங்களிப்புடன் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக உறுதியளித்தார்.


இச்சந்திப்பானது பிராந்திய ஊடகவியலாளர்களின் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.