தொடர் காணி மீட்புப் போராட்டம். 3வது வாரம்.!!!
தொடர் காணி மீட்புப் போராட்டம்.
3வது வாரம்.!!!
36வருடங்களாக ஆக்கிரமித்துள்ள எமது பூர்வீக நிலங்களை விடுதலைசெய்யக்கோரி தொடர் காணிமீட்புப் போராட்டம் கடந்த 24/04/2026 வெள்ளிக்கிழமை முதல் இடம்பெற்று வருகின்றது.
காணிகள் விடுவிக்கப்படும்வரை
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காணி மீட்பு போராட்டம் நடைபெறும்.
இதன் தொடர்ச்சியாக நாளை வெள்ளிக்கிழமையும் காலை 9.00மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை மயலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு முன்பாக இப்போராட்டம் நடைபெறும்.
நாளை பருத்தித்துறை முனையிலிருந்து காலை 8.00 மணிக்கு பேரூந்து புறப்பட்டு 8.30மணியளவில் மயிலிட்டி முகாம் சங்கத்தினை வந்தடைந்து தொடர்ந்து கடற்கரை வழியாக மயிலிட்டியை 9.00மணியளவில் வந்தடையும்.
எமது காணிகளை மீட்க ஒவ்வொரு குடும்பங்களிலிருந்தும் குறைந்தது ஒருவராவது பங்கேற்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றனர்.
தகவல்,
மயிலிட்டி மீள்குடியேற்றக்குழு.
பேரூந்து தொடர்புகளுக்கு:
077 8690 302
(ஜெயம்)
