முல்லைத்தீவில் மே 23 அன்று இலவச சட்ட உதவி ஆலோசனை முகாம்; பொதுமக்களுக்கு அழைப்பு!
முல்லைத்தீவில் மே 23 அன்று இலவச சட்ட உதவி ஆலோசனை முகாம்; பொதுமக்களுக்கு அழைப்பு!
முல்லைத்தீவு பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், எதிர்வரும் சனிக்கிழமை (மே 23, 2026) அன்று விசேட இலவச சட்ட உதவி ஆலோசனை முகாம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
முல்லைத்தீவு செஞ்சிலுவைச்சங்க மண்டபத்தில் (Red Cross Society Hall) அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
இவ்வுதவி முகாமில் தகுதிவாய்ந்த சட்டத்தரணிகள் கலந்துகொண்டு, பொதுமக்களின் பல்வேறுபட்ட சட்டச் சிக்கல்கள் மற்றும் ஆவணப் பிரச்சினைகள் தொடர்பில் கட்டணமின்றிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கவுள்ளனர்.
எனவே, சட்ட ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் தேவைப்படும் முல்லைத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள் அனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கலந்துகொண்டு நன்மையடையுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்
