Breaking News

உணவு பொதியிடலுக்கு "லஞ்சீற்" பயன்பாடு 100,000 தண்டம் அறவீடு.

 உணவு பொதியிடலுக்கு "லஞ்சீற்" பயன்பாடு 100,000 தண்டம் அறவீடு.




பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் பருத்தித்துறை நகரசபையினது அனுமதி பெறாமலும், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உணவு வளவுப்பதிவுச்சான்றிதழ் இல்லாமலும், உணவு பொதியிடலுக்கு லஞ்சீற் பயன்படுத்தியமை, உணவுத்தயாரிப்பிற்கு பயன்படும் நீரானது குடிக்கத்தகுந்தது என உறுதி செய்ய தவறியமை, உடல்நலத்தகுதியினை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவினை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் பேணாமல் உணவினை கையாண்டமை, மற்றும் வெளிச்சுற்றாடலினால் பாதிக்கப்படகூடியவாறான சூழலில் உணவினை உற்பத்தி செய்தமை தொடர்பாக உணவு வழங்கும் சேவை தாபனத்திற்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றைய தினம் (2026.05.07) விசாரணையின் பின் கடும் எச்சரிக்கையுடன் 100,000 தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.