Breaking News

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருவரையும் சொந்த பிணையில் செல்ல மன்று நேற்று அனுமதித்துள்ளது.

தன்னைத் தொந்தரவு செய்யும் வகையிலும், அவதூறுகளைப் பரப்பும் நோக்கிலும் செய்திகளையும், பரப்புரைகளையும் மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலே

தெல்லிப்பழைப் புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும் இன்னும் சில தரப்புகளுக்கும் எதிராக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மற்றொரு வைத்தியர், தனியார் ஊடகம், வலையொளி தளங்கள் உள்ளிட்ட சில தரப்புகளுக்கு எதிராகவே இந்த வழக்கு தொடரப்பட்டது. 

குறித்த வழக்கு விசாரணை நேற்று யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதிவான் உசைன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அவதூறு பரப்பினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களும் தமது சட்டத்தரணிகள் ஊடாக மன்றில் முன்னிலையாகி இருந்தனர். 

அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து இரு வைத்தியர்களையும் சொந்த பிணையில் செல்வதற்கு மன்று அனுமதித்து , வழக்கினை எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது. 

குறித்த வழக்கில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸின் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனாவும் 

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனும் ஆஜராகினர்.

#Jaffna #chavakachcheri #lka