கொடிகாமம் பசுக்கேணி பரமசிவன் ஆலய மகா கும்பாபிசேகம்!
கொடிகாமம் பசுக்கேணி பரமசிவன் ஆலய மகா கும்பாபிசேகம்!
யாழ்.தென்மராட்சி கொடிகாமம், ஆத்தியடி வீதியில்
குடிகொண்டுள்ள பசுக்கேணி அருள்மிகு ஸ்ரீ பரமசிவன் ஆலய
மகா கும்பாபிசேகம் நேற்றைய தினம் (22) சிறப்பாக இடம்பெற்றது.
கிரியா ரத்னம் சிவஸ்ரீ பால சுதர்சனக்குருக்கள் தலைமையில் இந்த கும்பாபிசேகம் இடம்பெற்றது.
அதிகாலை 4 மணிக்கு விநாயகர் வழிபாடோடு ஆரம்பித்து காலை 6.1 மணி தொடக்கம் 7.30 மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் மகா கும்பாபிசேகம் இடம்பெற்றது.
முன்னொரு காலத்தில் வல்லிபுரம் கணபதிப்பிள்ளை என்பவர் அரச மரத்தில் கால்நடைகளுக்கு குழை வெட்டும்போது சிவபெருமான் வயோதிபர் ஒருவர் வடிவில் வருகை தந்து தன்னை ஆதரிக்க வேண்டியுள்ளார்.
பின்னர் சத்தகம் ஒன்றை அவரிடம் வழங்கிவிட்டு மாயமாக மறைந்துள்ளார்.
எங்கு தேடியும் அந்த வயோதிபரை காணாத வல்லிபுரம் கணபதிப்புள்ளை அன்றிலிருந்து அந்த அரச மரத்தடியில் சிவனை வைத்து வழிபட்டு வரலானார்.
அதன்பின்னர் அவரது சந்ததியினரால் பசுக்கேணி அருள்மிகு ஸ்ரீ பரமசிவன் ஆலயம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
