வரலாற்று சாதனை: வடமராட்சி வலய கிரிக்கெட் தொடரில் உடுத்துறை மகாவித்தியாலயம் சாம்பியன்!
வரலாற்று சாதனை: வடமராட்சி வலய கிரிக்கெட் தொடரில் உடுத்துறை மகாவித்தியாலயம் சாம்பியன்!
வடமராட்சி வலய பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் ஒரு அங்கமாக நடைபெற்ற துடுப்பாட்ட தொடரில், உடுத்துறை மகாவித்தியாலய ஆண்கள் அணி முதன்முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
கடந்த 27.04.2026 அன்று கரணவாய் கொலின்ஸ் வித்யாலய மைதானத்தில் நடைபெற்ற இத்தொடரில், உடுத்துறை மகாவித்தியாலய வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதல் சுற்று ஆட்டத்தில் விக்னேஸ்வரா மகாவித்தியாலய அணியை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றனர் பின்ன்ர இரண்டாம் சுற்று கம்பர்மலை மகாவித்தியாலய அணியுடனான போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வெற்றியைத் தொடர்ந்தனர்.
பின்னர் அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி (Hartley College) அணியுடன் மோதி, விறுவிறுப்பான ஆட்டத்தின் இறுதியில் வெற்றியைத் தமதாக்கி இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
இறுதிப் போட்டி மற்றும் மாகாண மட்டத் தெரிவு இடம் பெற்றது இதில் மக்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அணியை எதிர்கொண்ட உடுத்துறை மகாவித்தியாலயம், நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிவாகை சூடியது.
"பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக வலய மட்டத்தில் கிரிக்கெட் சம்பியனாக முடிசூடி, மாகாண மட்டப் போட்டிகளுக்கு உடுத்துறை மகாவித்தியாலயம் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது."
இந்த வரலாற்று வெற்றியைப் ஈட்டிய வீரர்களுக்கும், அவர்களுக்குப் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என அனைவருக்கும் ஊர் மக்கள் மற்றும் பொது அமைப்புகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்
