Breaking News

கே ஐ ஏ இன்சூரன்ஸ் அலுவலகம் இன்றைய தினம் நெல்லியடியில் திறந்து வைப்பு..!


கே ஐ ஏ இன்சூரன்ஸ் அலுவலகம் இன்றைய தினம் நெல்லியடியில் திறந்து வைப்பு..! 



ஏ ஐ ஏ இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய கட்டட திறப்பு விழா அதன் முகாமையாளர் சி.ரகுபரன் தலைமையில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது.


நெல்லியடி மத்திய கல்லூரி வீதியில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தினை ஏ ஐ ஏ இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதம அதிகாரி சத்துருமுன வீரசிங்க கலந்து கொண்டு நாடாவெட்டி திறந்து வைத்ததுடன் கருத்துரையையும் வழங்கியதுடன் நெல்லியடி பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 43 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.


இதில் இதில் பிரதம விருந்தினராக 

ஏ ஐ ஏ இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதம அதிகாரி சத்துருமுன வீரசிங்க, சிறப்பு விருந்தினர்களாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர்களான சத்தியமூர்த்தி மற்றும் பிரசாத், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் சுரேந்திரன், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்