சிறந்த இரத்ததான ஒழுங்கமைப்பாளர் விருதை மீண்டும் தனதாக்கிய வீரசுரேந்திரன்
சிறந்த இரத்ததான ஒழுங்கமைப்பாளர் விருதை மீண்டும் தனதாக்கிய வீரசுரேந்திரன்!
உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு இன்று (27.06.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரி மண்டபத்தில் குருதிக் கொடையாளர்கள் மற்றும் இரத்ததான ஒழுங்கமைப்பாளர்களுக்கான கௌரவிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத்தின் தலைவர் பாலச்சந்திரமூர்த்தி வீரசுரேந்திரன் இந்த வருடமும் சிறந்த இரத்ததான ஒழுங்கமைப்பாளர் விருது மற்றும் சான்றிதழ் வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார். வாழ்த்துக்கள்....
