Breaking News

புனர்வாழ்வளிக்கபட்ட விடுதலை புலிகள் கட்சியின் மாநாடு..!



புனர்வாழ்வளிக்கபட்ட விடுதலை புலிகள் கட்சியின் மாநாடு..!



புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் 10 வது ஆண்டு விழா வல்வெட்டித்துறை தீருவில் குமரப்பா புலேந்திரன் சத்துக்கத்தில் அதன் தலைவர் இன்பராசா தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது.

[இதில் பிரதம விருந்தினராக வல்வெட்டித்துறை நகரபிதாவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான m k சிவாஜிலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக மாவீரர் பண்டிதர் அவர்களது தாயாரும் கலந்துகொண்டிருந்தனர். 

இம் மாநாட்டில் புனர்வாழ்வழிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் 10 ஆண்டுகால அறிக்கைகள் வாசிக்கப்பட்டதுடன் அவர்களின் கொள்கை பிரகடனமும் வாசிக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது.


இதில் புனர்வாழ்வழிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்