Breaking News

மிக பிரமாண்டமாக இடம்பெற்றது சிகரம் கல்வி நிலையத்தின் வருடாந்த கௌரவிப்பு விழா......!



மிக பிரமாண்டமாக இடம்பெற்றது சிகரம் கல்வி நிலையத்தின் வருடாந்த கௌரவிப்பு விழா......!



சிகரம் கல்வி நிலையத்தின் வருடாந்த கௌரவிப்பு விழா இன்றைய தினம் யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சிவகுமார் தலைமையில் மாலை 3:15 மணியளவில் மிக சிறப்பாக இடம்பெற்றது 


இவ் நிகழ்வானது சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் முகமாகவும் சாதனை பெண்மணிகளை சிறப்பிக்கும் முகமாகவும் இடம்பெற்றது 


மற்றும் இவ் நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் முரளிதரன் மற்றும் வடமராட்சி கிழக்கு சமாச தலைவர் தங்கரூபன் மற்றும் வத்திராயன் கிராம உத்தியோகத்தர் மற்றும் சிகரம் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் வடமாகாண சிகரம் அமைப்பாளர் உதரபாஸ்கரன் என பலரும் கலந்து கொண்டனர்