வல்லை நெசவாலைக்கு கிடைத்துள்ள வடமாகாண தொழில்முனைவோர் விருது
வல்லை நெசவாலைக்கு கிடைத்துள்ள வடமாகாண தொழில்முனைவோர் விருது
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை - உடுப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை நூற்றல் நெய்தல் ஆலை (வல்லை நெசவாலை) நிறுவனத்துக்கு 10.03.2026 செவ்வாய்க்கிழமை வடமாகாண தொழில்முனைவோர் விருது வழங்கி வைக்க பட்டுள்ளது.
நேற்று 10.03.2026 மாலை யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற குறித்த விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை நூற்றல் நெய்தல் ஆலையின் உதவி நிதி முகாமையாளரான திருமதி ரூபனா கௌசிகன் விருதினை பெற்றுக் கொண்டார். குறித்த விருதுவழங்கும் நிகழ்வில் நிறுவன முகாமையாளரான அமலன் மகேந்திரராஜா அவர்களும் பங்கேற்றிருந்தார்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் வரிசையில் தரமான உற்பத்திகளுக்காக இலங்கை நூற்றல் நெய்தல் ஆலைக்கு குறித்த விருது வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தின் தொழில் முனைவோர்களின் முயற்சிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்கள் வழங்கும் பங்களிப்புகளை கௌரவிக்கும் முகமாக வர்த்தகத் தொழிற்துறை மன்றம் யாழ்ப்பாணம் (CCIY) மற்றும் தேசிய தொழில் முயற்சி அதிகார சபை (NEDA) இணைந்து வடமாகாண தொழில் முனைவோர் விருதுகளை வழங்கியுள்ளன.
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு நாற்சந்திக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை நூற்றல் நெய்தல் ஆலையானது 95 வீதமான பெண் பணியாளர்களுடன் வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.
