Breaking News

தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூடடனிக்கும் இடையேயான கூட்டு கொள்கை நலன் சார்ந்த கூட்டு என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன்



தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூடடனிக்கும் இடையேயான கூட்டு கொள்கை நலன் சார்ந்த கூட்டு என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன்



தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூடடனிக்கும் இடையேயான கூட்டு கொள்கை நலன் சார்ந்த கூட்டு என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார். அவர் தனது அலுவலகத்தில் நாடாத்திய ஊடக சந்திப்பில் ஊடக வியயலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் 

அதன் முழு விபரமும் வருமாறு.


இலங்கை தமிழரசு கட்சிக்கும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலே இரண்டு தடவைகள் சந்திப்பு நடைபெற்றிருக்கின்றது. இந்த இரண்டு சந்திப்புகளிலே இரு தரப்புமே நாங்கள் ஒரு தேர்தலுக்கான கூட்டாக போகவில்லை. முதல் சந்திப்பிலேயே நாங்கள் எடுத்துக் கொண்ட விடயம் தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினையிலே இரண்டு தரப்பும் ஒன்றுபட்டு செயல்படுவது என்று அதனுடைய முடிவு. அதாவது இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற பிரச்சினைகளிலே நாங்கள் பிளவு பட்டு பயணிக்காமல் ஒன்றுபட்டு நின்று செயல்படுவது என்று தான் இந்த கூட்டினுடைய நோக்கம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் எங்களுக்கு பாரிய சவாலாக சிங்கள தேசிய கட்சி Npp யினுடைய ஆதிக்கம் என்பது வடக்கிலே கூடுதலாக இருக்கின்றது. 

நாங்கள் தமிழ் கட்சிகள் பிளவு பட்டு பல கட்சிகளாக இருக்கின்றார்கள். ஆகவே நாங்கள் ஒரு பலமாக இருக்கின்ற கட்சிகள் குறிப்பாக தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், போன்ற கட்சிகள் இங்கே செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

அந்த வகையே இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயகம் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இந்த மூன்று பேரும் தான் சந்திப்பதாக முதல் கூட்டம் இருந்தது. அவ்வாறுதான் அந்த கடிதங்களும் தமிழரசு கட்சியால் வழங்கப்பட்டது. ஆனால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி அந்த கூட்டத்திலே பங்கெடுக்கவில்லை. ஆனால் தமிழரசு கட்சியோடு அந்த கூட்டத்திலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கெடுத்திருந்தது.


இந்த சூழலிலே இலங்கை தமிழரசு கட்சியோடு நாங்கள் பேசிக் கொண்ட விடயங்கள் தமிழ் மக்களுடைய தமிழ் மக்கள் இப்பொழுது எதிர் நோக்குகின்ற ஆக்கிரமிப்பு பிரச்சனைகள் சம்பந்தமாகத்தான் முதல் கட்ட பேச்சு வார்த்தைகள் அமைந்துருந்தது. புதிய அரசியலமைப்பு ஒன்று வருகின்றபோது எவ்வாறு ஒன்றுபட்டு செயல்படுவது, எவ்வாறு ஒரு கருத்தை முன் வைப்பது, போன்ற விடயங்களே கதைக்கப்பட்டன. 

அரசாங்கத்தால் மேற்கொள்ளபடுகின்ற காணிகள் ஆக்கிரமிப்புக்கள் போன்ற விடயங்களில் ஒன்று பட்டு செயல்படுவது. குறிப்பாக கிபுள் ஓயா திட்டம், காணிகள் ஆக்கிரமிப்பு உட்பட தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற ஆக்கிரமிப்பு பிரச்சனை களில் ஒன்றுபட்டு செய்யற்படுவது என்பதே.

முதற்கட்டமாக கதைக்கப்பட்டது.

எதிர்காலத்திலே இது ஒரு நிரந்தர கட்டமைப்பாக செயல்படுவதற்குரிய அடித்தளமாக இருக்கும் என நம்புகின்றேன்.


இரண்டாவது சந்திப்பில் தமிழ் மக்களுடைய தேசிய நலன் சார்ந்த விடயங்கள் பேசபட்டது. அடுத்த கட்டங்களிலே தேர்தல் அரசியல் என்று வருகின்ற பொழுது எவ்வாறு செயல்படுவது என்பது சம்பந்தமாக கதைக்கப்படும் ஆனால் இப்போது தமிழ் மக்களுடைய ஒரு தேசிய நலம் சார்ந்த பொது வேலை திட்டங்களில் ஒன்று பட்டு செயல்படுவது என்பதே முடிவாக இருக்கும் என்றார்.