Breaking News

எட்டு மாதங்களின் பின்னர் இடம் பெற்ற பச்சிளைப்பள்ளி அபிவிருத்தி குழு கூட்டம்....!



எட்டு மாதங்களின் பின்னர் இடம் பெற்ற பச்சிளைப்பள்ளி அபிவிருத்தி குழு கூட்டம்....!




கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 9:30 மணியளவில் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது 


இவ் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ஆனது பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் யாழ் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில் இடம்பெற்றது 


குறிப்பாக இந்த அபிவிருத்தி குழு கூட்டம் கடந்த ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரம் இடம்பெற்றதை தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களுக்கு பின்னர் இடம்பெற்றது என குறிப்பிடத்தக்கது 


இவ் அபிவிருத்தி குழு கூட்டத்தில் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பளை பிரதேச சபை தவிசாளர் சுரேன் மற்றும் பளை பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்