Breaking News

மணல்காடு சவுக்கம் காட்டில் தீ பரவல், கட்டுப்படுத்திய பருத்தித்துறை பிரதேச சபை


மணல்காடு சவுக்கம் காட்டில் தீ பரவல், கட்டுப்படுத்திய பருத்தித்துறை பிரதேச சபை 



யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு சவுக்கம் காட்டில் இன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் அறிவுறுத்தலின் பேரில் உபதவிசாளர் காந்தரூபன், செயலாளர் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தண்ணீர் பாய்ச்சி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த சவுக்கு மர காட்டிற்கு அடிக்கடி விஷமிகள் தீவைப்பது பல வராதங்களாக நடைபெற்று வருவதுடன் நாளாந்தம் சுமார் 50 க்கு மேற்பட்ட விறகு வியாபாரிகள் சவுக்கம் விறகுகளை வேட்டி விறகு தேவைக்காக கொண்டு செல்ல படுவதும் குறிப்பிட தக்கது.

தீயணைப்பு பணியில் பிரதேச மக்களும் இணைந்திருந்தனர்.


தீ பற்றிய பகுதியை 


வனவள திணைக்கள அதிகாரிகளும் நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தனர்.