Breaking News

சிறப்பாக இடம்பெற்ற செம்பியன் பற்று ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை விளையாட்டு போட்டி..!


சிறப்பாக இடம்பெற்ற செம்பியன் பற்று ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை விளையாட்டு போட்டி..!



யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு 

ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் விளையாட்டு போட்டி இன்றைய தினம் பிற்பகல் பாடசாலை அதிபர் திரு செல்வரட்னம் பகிதரகுமார் தலைமையில் இன்று பிற்பகல் 1:30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.


இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மேலத்தேய இசை முழங்க வரவேற்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு தேசிய கொடி, பாடசாலை கொடி, இல்ல கொடிகள் ஏற்றப்பட்டு நிகழ்வின் பிரதம விருந்தினர் விளையாட்டு போட்டியை ஆரம்பித்து வைக்க விளையாட்டு போட்டி ஆரம்பமானது.


இதில் வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கான பரிசில்கள் பதக்கங்கள், சான்றிதழ்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமராட்சி வலய கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் திரு தவரட்னராசா சுஜீகரன் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு வல்லிபுரம் நின்மதிராசா ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் மற்றும் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட பா. றோ. மருதநாயகம் முன்னாள் உப தபால் அதிபர் ஆகியோர் வழங்கி வைத்ததுடன் தொடர்ந்து பரிசில்களை வழங்க அழைக்கப்பட்ட மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின்செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் அவர்கள் வழங்கிவைத்தார்.


இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள், என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்