Breaking News

திருகோணமலைக்கு போர் கப்பலை அனுப்பியது அனுரவின் தமிழர்களுக்கு எதிரான சூழ்ச்சியே

 திருகோணமலைக்கு போர் கப்பலை அனுப்பியது அனுரவின் தமிழர்களுக்கு எதிரான சூழ்ச்சியே



ஈரானின் போர்க்கப்பலை திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தியதன் மூலம் தமிழ் மக்களையும் அமெரிக்க அரசாங்கத்தையும் பகைவர்களாக ஆக்குவதற்கான திட்டமிட்ட இலங்கை அரசாங்கத்தின் சூழ்ச்சியென்று வடமாகாண காணிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்


இன்று (6)கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மத்திய கிழக்கில் போர் மேகம் நீடிக்கின்றது. ஈரான்,இஸ்ரேல், அமெரிக்கா இடையில் தாக்குதல்கள் இடம் பெற்று வருகின்றன


இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரானுடைய போர் கப்பல் அமெரிக்காவினுடைய நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்டது


இதன் போது நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டு 30க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளனர்


ஈரானுடைய இரண்டாவது கப்பலும் இலங்கையில் நங்கூரமிடுவதற்காக அனுமதி கோரி இருந்த நிலையில் எந்தவித அனுமதியும் கொடுக்காமல் அமைதியாக இருந்த அரசாங்கம் நாடாளுமன்றத்தில் எழுந்த கடும் எதிர்ப்பால் ஈரானிய போர் கப்பலுக்கு அனுமதி கொடுத்துள்ளது


ஈரானிய போக்கப்பலில் இருந்த பணியாளர்களை கொழும்பில் தரையிறக்கி விட்டு போர்க்கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வந்தது தமிழர்களையும், அமெரிக்காவையும் மூட்டி விடும் செயற்பாடாகவே நான் கருதுகிறேன்


காலி துறைமுகம்,ஹம்பாந்தோட்டை துறைமுகம்,கொழும்பு துறை துறைமுகங்கள் இருக்கின்ற பொழுது அதற்கு அப்பால் திருகோணமலையில் போர்க்கப்பலை கொண்டு வந்து கட்டி விடுவது அனுர அரசாங்கம் தமிழர்களுக்கு மறைமுகமாக செய்யும் சூழ்ச்சியாகவே நான் கருதுகின்றேன்


அனுர அரசாங்கம் மிக தந்திரோபாயமாக காய் நகர்த்துகிறது அமெரிக்காவையும் தமிழர்களையும் பகைமைக்கு உள்ளாக்கும் செயற்பாடாக இது இருக்கிறது


வட,கிழக்கு என்பது தமிழர் தாயகம் திருகோணமலை துறைமுகத்திற்கு இந்த கப்பலை அனுப்பி வைத்துவிட்டு அமெரிக்கா அதனை தாக்கட்டும் அல்லது அமெரிக்கா தமிழ் மக்களுடன் எதிர்க்கட்டும் என்பதுதான் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு


200க்கும் அதிகமான பணியாளர்களை கொழும்பில் இறக்கிய அரசாங்கம் அத்தனை துறைமுகங்களையும் தாண்டி ஏன் தமிழர் தாயகமான திருகோணமலை துறைமுகத்தில் போர் கப்பலை நிறுத்தியதென அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.