Breaking News

வெகு விமரிசையாக இடம்பெற்றுக் கொண்டு இருக்கும் மருதோன்றீச்சரப் பெருமான் சிவராத்திரி வழிபாடுகள்.....!


வெகு விமரிசையாக இடம்பெற்றுக் கொண்டு இருக்கும் மருதோன்றீச்சரப் பெருமான் சிவராத்திரி வழிபாடுகள்.....!




மகா சிவராத்திரியை சிறப்புவிக்கும் முகமாக பச்சிளைப்பள்ளி முடங்கு தீவு மருதோன்றீச்சரப்பெருமான் ஆலய வழிபாடுகள் கிளிநொச்சி மற்றும் யாழ் மக்களால் மிகவும் சிறப்பாக இடம்பெற்று கொண்டு உள்ளது 



 இங்கு வரும் பக்தர்கள் இன்றைய தினம் காலை7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை அடியவர்கள் தங்கள் கரங்களால் நீர் ஊற்றி வழிபாடு செய்து கொண்டு உள்ளனர் 


மற்றும் மாலை 6.00 மணிஅளவில் அபிஷேகம் இடம்பெற்று நான்கு கால பூசைகள் இடம்பெற உள்ளதோடு ஆலய முன்றலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அமர்ந்து உள்ளதை காணக்கூடிய வாறு உள்ளது 


 பின்னர்மாலை 8.00மணி அளவில் பச்சிலைப்பள்ளி மாசார் நாமகள் கலாமன்றம் மற்றும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கலைச்சுடர் கலாமன்றங்கள் இணைந்து வழங்கும் கலை நிகழ்வுகள் இடம்பெறும்.


அடியவர்களுக்கான அன்னதானம் மற்றும் தாகசாந்தி நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு அர்ச்சனை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.