யாழில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி தபால் கையெழுத்து போராட்டம்..
யாழில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி தபால் கையெழுத்து போராட்டம்..
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் (PTA)மற்றும் வரவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு( PSTA) ஆகியவற்றை நிறுத்துமாறு யாழ் பல்கலைக்கழக மூன்றலில் தபால் கையெழுத்து போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மக்கள் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
குறித்த கையெழுத்து போராட்டத்தில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும் புதிதாக வரவுள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் வரைபை நீக்கக் கோரி நீதி அமைச்சுக்கு தபால் மூல கையெழுத்து இடப்பட்டது
