ஞானச்சுடர் மலர் வெளியீடும், வாசகர் போட்டிக்கான பரிசில்களும்..!
ஞானச்சுடர் மலர் வெளியீடும், வாசகர் போட்டிக்கான பரிசில்களும்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஞானசுடர் 338 வது ஆன்மீக மலர் வெளியீடு
சந்நிதியான் ஆச்சிரமத்தில் அதன் முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில்,
இன்று காலை இடம்பெற்றது. இதில்
வெளியீட்டுரையினை - சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி சிந்துரா கலியுகவரதன் அவர்களும்,
மதிப்பீட்டுரையினை
ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி புனிதவதி சண்முகலிங்கம் அவர்களும் நிகழ்த்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இதேவேளை 2025 ம் வருட ஞானச்சுடர் மலருக்கான வாசகர்களுக்கு நடத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி வெற்றியடைந்தவர்களுக்கான 1ம், 2ம்,3ம் மற்றும் 10 ஆறுதல் பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் சந்நிதியான் அச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், அச்சிரம தொண்டர்கள் அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
